தனது இரண்டாவது 5G கைப்பேசியையும் இவ்வருடம் அறிமுகம் செய்யும் OnePlus

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான OnePlus ஆனது ஏற்கனவே இவ் வருட ஆரம்பத்தில் OnePlus 7 எனும் 5G கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மற்றுமொரு 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Peter Lau உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யாத நிலையில், சாம்சுங் நிறுவனம் ஒரே ஒரு 5G கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இப்படியிருக்கையில் OnePlus நிறுவனம் இரண்டாவது 5G கைப்பேசியினையும் அறிமுகம் செய்யவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கைப்பேசியானது OnePlus 7T எனும் பெயருடன் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்