ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியை அதிரடியாக நிறுத்துகின்றது சாம்சுங்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் முன்னணியில் திகழும் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் நிறுவனமாக Samsung Electronics Co Ltd பார்க்கப்படுகின்றது.

தென்கொரியாவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளதுடன் சில நாடுகளில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்தும் வருகின்றது.

இதில் சீனாவும் உள்ளடங்கும். எனினும் தற்போது சீனாவில் மொலைல் கைப்பேசிகளின் வடிவமைப்பினை அதிரடியாக நிறுத்தியுள்ளது.

சீனாவில் பொருளாதாரம் திடீரென விழுந்துள்ள நிலையில், பணியாளர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்தே இந்த அதிரடி முடிவினை சாம்சுங் எடுத்துள்ளது.

இதேவேளை சோனி நிறுவனமும் பீஜிங்கில் காணப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசி தொழிற்சாலையை மூடிவிட்டு தாய்லாந்தில் மாத்திரம் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்