Samsung Galaxy XCover Pro கைப்பேசியின் விலை விபரம் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய Galaxy XCover Pro ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இதன் விலையானது 499 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக அமெரிக்காவில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையிலேயே விலை விபரம் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்ட குறித்த கைப்பேசியானது Samsung Exynos 9611 Processor ஐ கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 25 மெகாபிக்சல்களை உடைய 2 கமெரா மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு கமெரா என 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4,000 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...