சாம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்புசி Galaxy M01s

Report Print Givitharan Givitharan in மொபைல்
491Shares

சாம்சுங் நிறுவனமாது Galaxy M01s எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 6.2 அங்குல அளவுடையதும் HD+ தொழில்நுட்பத்தினை உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Helio P22 mobile processor, பிரதான நினைவகமாக 3GB RAM, மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

Android 9 Pie இயங்குதளத்துடன் விற்பனைக்கு வரவுள்ள இக் கைப்பேசியில் 4000 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்கள் என்பனவும் காணப்படுகின்றது.

இதன் விலையானது 133 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்