டொலர், பவுண்ட்க்கு எதிராக இலங்கை ரூபா பாரியளவில் வீழ்ச்சி

Report Print Vethu Vethu in பணம்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாவில் ஏற்பட்ட மாற்றம் என்னவென்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை ரூபாய் அமெரிக்கா டொலரிற்கு எதிராக 1.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விகித அடிப்படையில், இலங்கை ரூபாய் யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 3.0 வீதத்திலும், ஜப்பானின் யென்னுக்கு எதிராக நூற்றுக்கும் 1.5 வீதத்திலும், கனேடிய டொலருக்கு எதிராக நூற்குக்கு 5.8 வீதத்திலும், இந்திய ரூபாய்க்கு எதிராக நூற்றுக்கு 1.4 வீதத்திலும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதியினுள் ஸ்ரேலிங் பவுண்ட்களுக்கு எதிராக நூற்றுக்கு 18.8 வீதத்திலும் இலங்கை ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments