பயனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிரபல ஆபாச தளம்! முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலாவது ஏமாற்றுவதில் குறியாக இருப்பார்கள்.

இந்நிலையில், முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பிரபல ஆபாச தளமான Pornhub தனது பயனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஏப்ரல் 1ம் திகதி Pornhub தளத்தில் உள்நுழைந்த ஒவ்வொரு ஒரு பயனர்களும் கதிகலங்கி போயுள்ளனர்.

வழக்கமான நாட்களில் பயனர்கள் தாங்கள் கண்ட வீடியோவை அவர்களின் விருப்பம் மற்றும் அனுமதியுடனே சமூக வலைதளங்களில் பகிர முடியும்.

ஆனால், ஏப்ரல் 1ம் திகதி வீடியோ கண்ட பிறகு குறித்த வீடியோ தானாகவே பயனர்களின் சமூக வலைதளங்களில் பகிரப்படும் என Pornhub தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கண்ட அதிர்ந்து போன பயனர்கள், தாங்கள் ஆபாச படம் பார்ப்பது பொது வெளியில் பகிரப்பட்டு விட்டது என நம்பி அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஆனால், Pornhub தளம் தனது பயனர்கள் அனைவரையும் ஏமாற்றி முட்டாள் தினத்தை சிறப்பாக கொண்டாடியது இறுதியில் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பின்னரே பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பலர் தங்களின் கதிகலங்கிய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments