102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண்: நடந்தது என்ன?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Shenzhen Bao'an சர்வதேச விமானநிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் ஹாங்காங்கிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோடைக்காலத்தில் ஸ்வெட்டர் வேறு அணிந்து சென்றுள்ளார்

இதனால் சந்தேகமடைந்த விமானநிலைய அதிகாரிகள் அப்பெண்ணை சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் ஐபோன்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து மொத்தம் 102 ஐபோன்கள் மற்றும் 15 Tissot காடிகாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் மொத்த எடை 9 கிலோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டில்84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments