எஜமானுக்காக காத்திருந்து பட்டினியில் உயிரை விட்ட பாசக்கார நாய்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் நாய் ஒன்று தனது எஜமானுக்காக காத்திருந்து அவர் வராததால் மனம் உடைந்து தனது உயிரை விட்டுள்ளது.

கொலம்பிய நாட்டு விமான நிலையத்திற்கு கடந்த மாதம், இரண்டு வயது நாய் ஒன்று தனது எஜமானுடன் விமான நிலையத்திற்கு வந்துள்ளது. ஆனால், ஏனோ அவர் நாயை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக தனது எஜமானைக் காணாமல் அந்த நாய், விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேடிப் பார்த்தது. புதிதாக வருபவர்களை தன் எஜமானாக இருப்பாரோ என்று ஆர்வத்துடன் ஓடி பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், நாட்கள் கடந்தாலும் நாயின் எஜமான் மட்டும் வரவேயில்லை. அதனால் விரக்தி அடைந்த நாய், விமான ஊழியர்கள் கொடுத்த உணவையும், தண்ணீரையும் கூட உட்கொள்ளாமல் பட்டினி கிடந்தது.

நாளுக்கு நாள் நாயின் நிலைமை மோசமானதையடுத்து, விமான ஊழியர்கள் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதற்கு மருந்தும், திரவ உணவும் செலுத்தப்பட்டன.

எனினும், 48 மணிநேரத்தில் நாய் இறந்துவிட்டது. இது குறித்து கால்நடை மருத்துவர் சோட்டோமோன்ட் கூறுகையில், ‘இந்த இளம் நாய்க்கு எந்த வித நோயும் இல்லை, மன அழுத்தம் ஒன்று மட்டுமே பிரச்சனையாக இருந்துள்ளது.

இருப்பினும், இத முரட்டுத்தனமாகவோ, கோபமாகவோ நடந்துகொள்ளவில்லை. ஒருவரின் அன்புக்காக ஏங்கி தனது முடிவை தானே தேடிக் கொண்ட இந்த நாயின் இறப்பு வருத்தமளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்