கடும் நெருக்கடியில் வடகொரியா: 190,000 சிறுவர்கள் கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐ.நாவின் கடும் பொருளாதார தடையால் வடகொரியாவில் 190,000 சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டத்தின் வாயிலாக வடகொரொயாவுக்கு அளித்து வந்த நிதி உதவியை ஐ.நா கடந்த மாதத்துடன் நிறுத்திக் கொண்டது.

வடகொரிய அரசின் தொடர் ஏவுகணை சோதனை நடவடிக்கையே இந்த திட்டம் ரத்தானதற்கு முக்கிய காரணியாகவும் கூறப்பட்டது.

திட்டம் திடீரென்று ரத்தானதால் இதுவரை ஒரு வேளை உணவேனும் சரிவர கிடைக்கப்பெற்று வந்த 190,000 குழந்தைகள் தற்போது உணவின்றி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சுமார் 14.6 மில்லியன் டொலர் தொகை தேவைப்படும் எனவும், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உணவு என குறித்த திட்டத்திற்கும் மேலும் 25 மில்லியன் டொலர் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின்படி வடகொரியாவில் 5-ல் 2 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் வடகொரிய தலைவரின் சொகுசு வாழ்க்கையும், தொடர் ஏவுகணை சோதனைகளும் அந்த நாட்டை கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்