பறக்கும் விமானத்தில் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மகன்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸை சேர்ந்த விமான ஓட்டுநர் ஒருவர் கடந்த 17 வருடங்களாக தனது பெற்றோருடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடாத நிலையில் இன்று அவர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நெகிழ்ச்சி வீடியோ வைரலாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் விமானியாகப் பணியாற்றி வருகிறார் ஜுயன் பெளலோ பெர்மின்.

இவர் கடந்த 17 வருடமாக பெர்முடாவில் வசித்து வரும் தனது பெற்றோருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது இல்லை, இது இவரது பெற்றோருக்கு மிகவும் மன வருத்தமாக இருந்துள்ளது.

இந்நிலையில், தனது பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வான்கோவெர் இருந்து மணிலா செல்லும் விமானத்தில் இருந்த தனது பெற்றோரை கிறிஸ்துமஸ் தினத்தன்று சந்தித்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர், மகனை கட்டியணைத்து சந்தோஷம் அடைந்துள்ளனர். விமானத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

எனது பெற்றோரை சந்திப்பதற்கு மிகுந்த ஆவலுடன், மகிழ்ச்சியாக சென்றேன். எங்களின் சந்திப்பு இவ்வளவு வைரல் ஆகும் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்