14 வயதில் தாயானேன்: அகதி சிறுமியின் உணர்ச்சிபூர்வமான கதை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
461Shares
461Shares
ibctamil.com

13 வயதிலேயே திருமணம் நடந்துவிட்டதால் தன்னால் தொடர்ந்து பள்ளிப்படிப்பை படிக்க முடியவில்லை என ரோஹிங்கியா பெண் அகதி கூறியுள்ளார்.

மியான்மரை சேர்ந்த பெண் அஸ்மோத் அரா (14), இவரின் பெற்றோர் அங்கு கொல்லப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு ரோஹிங்யா அகதியாக வந்தடைந்தார்.

இதையடுத்து அராவுக்கு கடந்தாண்டு 13 வயதில் திருமணம் நடந்துள்ளது.

தற்போது தனது 14 வயதில் அவர் தாயாகியுள்ளார், அரா கூறுகையில், திருமணத்துக்கு முன்னர் என் தோழிகளுடன் விளையாடுவேன், ஆனால் இப்போது கணவன் மற்றும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பு உள்ளதால் விளையாட முடியவில்லை.

இன்று என் பெற்றோர் உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு இளம் வயதில் திருமணம் நடந்திருக்காது.

தற்போது எனக்கென ஒரு குடும்பம் உள்ளதால் பாதுகாப்பாக உணர்கிறேன்.

எனக்கு பள்ளிக்கு சென்று படிக்க ஆசை இருந்தாலும் அது முடியாது என எனக்கு தெரியும்.

ஆனால் என் குழந்தையை நன்றாக படிக்க வைத்து அவள் விருப்பப்படி அவளை ஆளாக்குவேன் என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்