அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிறுநீர் கழித்து இளைஞன் செய்த மோசமான செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்
264Shares

சீனாவில் இளைஞர் ஒருவர் லிப்டில் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் Chongqing பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார். சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று லிப்டில் கீழ்தளங்கள், மேல்தளங்கள் போன்றவைகளுக்கு செல்ல பயன்படும் பட்டன்களை நோக்கி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார்.

இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு தவறான செயல் எனவும் திடீரென்று லிப்டில் இருக்கும் பட்டன்கள் இது போன்ற செயல்களால் செயலிழந்துவிட்டால், மொத்தமாக பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என பொலிசார் கூறியுள்ளார்.

மேலும் அந்த இளைஞன் நிச்சயமாக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு நபராகத் தான் இருக்க முடியும், சிசிடிவி காட்சிகள் உள்ளதால், பொலிசார் அவரை உடனடியாக பிடித்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்