கட்டிடத்தின் மீது மோதிய கப்பல்: ஹாலிவுட் படம் போல காட்சிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துருக்கியில் பழங்கால கட்டிடத்தின் மீது கப்பல் மோதியதால், அங்கிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள Bosporus பகுதியில் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Hekimbaşı Salih Efendi Yalısı என்ற மேன்சன் உள்ளது. நீர்நிலை ஓரத்தில் இருக்கும் இங்கு அவ்வப்போது திருமணங்கள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு கடந்த சனிக்கிழமை வந்த சுமார் 225 மீற்றர் நீளம் உள்ள Vitaspirit என்ற பாரிய கப்பல் குறித்த மேன்சன் மீது மோதியுள்ளது.

கப்பல் மோதுவதற்கு முன்னர் மேன்சன் உள்ளே இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஓடும் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கப்பல் மோதியதன் காரணமான கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் Bosporus நீர்நிலை தான் கருங்கடலை இணைக்கும் முக்கிய நீர்வழியாக உள்ளது, அதுமட்டுமின்றி கப்பல் s வடிவில் திரும்ப முயன்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்