சவுதியில் பிரம்மாண்டமாக உருவாகும் பொழுதுபோக்கு நகரம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் வருவாயை ஈட்ட, பிரம்மாண்டமாக ‘பொழுதுபோக்கு நகரம்’ ஒன்றை அந்நாட்டின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உருவாக்க இருக்கிறார்.

சவுதியில் முடி இளவரசராக முகமதி பின் சல்மான் பதவியேற்ற பின், பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். சமீபத்தில் அந்நாட்டில் தடையில் இருந்த திரையரங்குகளை திறக்க அவர் அனுமதி அளித்திருந்தார்.

சவுதி அரேபியாவில் இதுவரை எண்ணெயின் மூலமாகவே 90 சதவித வருவாயை அந்நாட்டு அரசு ஈட்டி வந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டில் எண்ணெய் விலை குறைந்ததால், பெரிய அளவில் அந்நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, அங்கு வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இதனால் சவுதி அரசுக்கு வருவாய் போதவில்லை.

இந்நிலையில், வருவாயை பெருக்க முடி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி, சவுதியில் ‘பொழுதுபோக்கு நகரம்’ ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

ரியாத் நகரின் மேற்கு பகுதியில் அமைய உள்ள இந்நகரம், இன்னும் சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க மக்களின் கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்படும் இந்த நகரில் மால்கள், தீம் பார்க், திரையரங்குகள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். அத்துடன், பெரிய அளவிலான இஸ்லாமிய கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்படாது என கூறப்படுகிறது.

இளவரசர் முகமது பின் சல்மான் ’Vision 2030’ என்ற திட்டத்தின்படி, சவுதியில் Technical City, IT company என தொழில்நுட்ப விடயங்களை அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers