இந்திய நாடாளுமன்றத்திலும் பாலியல் தொல்லை: காங்கிரஸ் பெண் மூத்த தலைவர்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இந்திய நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் பேசினார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான ரேணுகா சவுத்ரி, நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சினிமா துறையில் மட்டும் கிடையாது, அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லை இருக்கிறது.

நாடாளுமன்றமும் இதற்கு விதிவிலக்கல்ல, இது ஒரு கசப்பான உண்மை, இந்த கொடுமைக்கு எதிராக, இந்தியா துணிந்து நிற்க வேண்டும், நானும் இதனால் பாதிக்கப்பட்டேன் என தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers