குழந்தை இப்படி தான் இருக்குமா? கழிப்பறையில் குழந்தை பிறந்ததை பார்த்து பதறி துடித்த பெண்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் பல ஆண்டுகளாக குழந்தை பிறக்காத காரணத்தினால், தற்போது திடீரென்று குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை பார்த்து பெண் அலறியுள்ளார்.

பிரேசில் நாட்டில் பிரதி பெற்ற தீவு பெர்னாண்டோ டி நோரன்ஹோ. அழகிய கடற்கரையும், வனப்பகுதியும் கொண்ட இந்த தீவிற்கு 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

சிறிய தீவு என்பதால், இயற்கை அழகு குறைந்தவிடக் கூடாது என்பதற்காக அங்கு மக்கள் தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தை பெறுவதற்கும் பிரேசில் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன் காரணமாக அந்த தீவில் உள்ள மருத்துவமனையில் பிரசவ வார்டு மட்டும் இல்லை.

இந்நிலையில் அங்கிருக்கும் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை கழிப்பறைக்கு சென்ற போது அங்கு குழந்தை பெற்றுள்ளார்.

குழந்தை பற்றிய தகவலே அறியாத அவர், திடீரென்று குழந்தையை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து கூப்பாடு போட்டு அலறியுள்ளார்.

அதன் பின் அங்கு வந்த பெண்ணின் கணவர் குழந்தையை கையில் எடுத்து, மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை எப்படி இருக்கும் என்பதே தெரியாத அப்பெண் பிரசவத்திற்கு பின் மயங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அந்தத் தீவில் பல ஆண்டுகளாக குழந்தையே பிறக்காததால் குழந்தைப் பேறு பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை எனவும் குழந்தை எப்படி பிறக்கும் என்ற தகவல் தனக்குத் தெரியாது எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.

தங்கள் தீவில் 12 ஆண்டுகளுக்குப் பின், குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியானதும், அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆடைகள், ஆபரணங்கள் என பரிசுப் பொருட்களுடன் குறித்த மருத்துவமனைக்கு முற்றுகையிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers