ரஷ்யாவுக்கு வாருங்கள்: வடகொரியா தலைவருக்கு அழைப்பு விடுத்த புடின்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ரஷ்யாவுக்கு வருகை தருமாறு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த 12ம் திகதி அமெரிக்கா- வடகொரியா ஜனாதிபதிகளின் சந்திப்பு நடந்தது.

அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதாக வடகொரியா உறுதியளித்தது.

இந்நிலையில் வருகிற செப்டம்பரில் ரஷ்யாவுக்கு வருமாறு புடின், கிம்முக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவின் முக்கிய அதிகாரி கிம் யோங் நாம்மை சந்தித்த போதே, புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா- வடகொரியா இடையேயான மோதல் குறித்து உலகமே கவலையுடன் இருந்த நிலையில், சிங்கப்பூர் சந்திப்பால் பெரிய மோதலுக்கான அச்சுறுத்தல் குறைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சமாதான மற்றும் ராஜதந்திர வழிமுறையில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வாய்ப்பாக மாநாடு அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்