உலகக்கோப்பை போட்டியின் நேரலையில் முத்த சர்ச்சை!

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகக்கோப்பை போட்டியின் போது நேரலையில் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு இரண்டு ரஷ்ய பெண்கள் முத்தம் கொடுத்த பிரச்சனை விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டிக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர். இவர்கள் கமெராவின் முன்னால் நின்று செய்திகளை வழங்கிகொண்டிருக்கையில், இவர்களை குறும்பாக சிலர் கிண்டல் செய்வார்கள்.

இந்நிலையில், தென்கொரிய தொலைக்காட்சியை சேர்ந்த ஆண் பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்கோ நகரில் கால்பந்து போட்டி குறித்து கமெரா முன் விவரித்து கொண்டிருந்தார்.

அப்போது, இரண்டு ரஷ்ய இளம்பெண்கள் அடுத்தடுத்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த காட்சி நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முத்தம் வாங்கிய அந்த பத்திரிகையாளர் வெட்கத்துடன் சிரித்து கொண்டார்.

பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆண்கள் முத்தம் கொடுத்தால், அது பாலியல் சீண்டல் என்றால், இதுவும் பாலியல் சீண்டலே ஆனால் இதனை யாரும் கண்டிக்க மறுக்கின்றனர் என பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ரஷ்யாவில் பெண் பத்திரிகையாளருக்கு, ஆண் நபர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்