தாய்லாந்து குகையிலிருந்து அனைவரும் மீட்பு: 18 நாட்களுக்கு பின் நிகழ்ந்த அதிசயம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1260Shares
1260Shares
lankasrimarket.com

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர் உட்பட மொத்தம் 13 பேரும் மீட்கப்பட்டுவிட்டனர்.

இச்சம்பவம் உலகின் பல பாகங்களிலும் இருந்து உற்று நோக்கிக் கொண்டிருந்த பல மில்லியன் பேருக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பயிற்சி செஷனுக்குப்பின் அந்த 11 முதல் 16 வயதுடைய சிறுவர்களும் அவர்களது 25 வயதுடைய பயிற்சியாளரும் அந்த குகைக்குள் சென்றார்கள்.

திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக மேலும் குகையின் உள் பகுதிக்கு சென்றபோது வெள்ளம் அதிகரிக்க அங்கேயே சிக்கிக் கொண்டார்கள்.

இந்த செய்தி வெளியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஜூலை 2ஆம் திகதி அதாவது ஒன்பது நாட்களுக்குப் பிறகு, பிரித்தானிய ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் பசியுற்று சோர்வடைந்திருந்த கால் பந்தாட்டக் குழுவினரை கண்டுபிடித்த செய்தி தாய்லாந்தையே மகிழ்ச்சியில் திணறடித்தது.

அவர்களை மீட்க நான்கு மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு உணவும் பிற தேவையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டதோடு ஒரு மருத்துவரும் குகைக்குள் சென்றார்.

ஒரு மீட்புக் குழு வீரரின் மரணம் ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து எப்படியாவது அவர்களை மீட்டே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டனர் மீட்புக் குழுவினர்.

ஒரு பிரம்மாண்ட மீட்புப் பணி ஆரம்பமாயிற்று, ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள்.

திங்கட்கிழமை நான்குபேர், இன்று மீதி நான்கு பேருடன் பயிற்சியாளரும் என அனைவருமே இன்று மீட்கப்பட்டு விட்டனர்.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே மீட்கப்பட்டவர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீட்புக் குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் ”இது ஒரு அற்புதமா, விஞ்ஞானமா அல்லது என்ன என்று தெரியவில்லை, 13 Wild Boarகளும் குகையிலிருந்து மீட்கப்பட்டாயிற்று” என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

முதல் இணைப்பு- தொடரும் தாய்லாந்து குகை மீட்புப்பணிகள்

சுற்றுலா சென்ற12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்ட விவரம் வெளியானதும் மீட்பு குழுவினர் அவர்களை மீட்க பலவித முயற்சிகள் மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே.

மீட்பு நடவடிக்கையின் மூன்றாவது நாளான இன்று இதுவரை பதினொன்றாவது நபர் வரை மீட்கப்பட்டாயிற்று.

இன்று இரவுக்குள் 13 பேருமே மீட்கப்பட்டு விடுவார்கள் என்னும் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது மீட்கப்பட்டவர் யார் என்ற விவரத்தை இதுவரை மீட்பு குழுவினர் வெளியிடவில்லை.

இந்நிலையில் சமையல் கலை நிபுணர்கள் இன்றைக்குள் அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள் என்னும் நம்பிக்கையில் மீட்புக் குழுவினருக்கான கடைசி உணவு என்ற பெயரில் "Klua Kling" என்னும் உணவைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்