பசிபிக் கடலுக்குள் இறங்கிய விமானம்: பயணிகளின் நிலை என்ன? பரபரப்பு வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பயணிகள் ஜெட் விமானம் ஒன்று 47 பேருடன் பசிபிக் கடலுக்குள் இறங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

Micronesia என்னும் தீவு நாட்டிலிருந்து 36 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களை ஏற்றி கொண்டு ஜெட் விமானம் ஒன்று சுக் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

குறித்த விமான நிலையத்தை சென்றடையும் முன்னர் Papua New Guinea-வில் விமானத்தை நிறுத்த விமானி முயற்சி செய்த நிலையில் ஓடுபாதையை விட 150 மீட்டர்கள் அதிகதூரம் சென்று பசிபிக் கடலில் போய் நின்றது.

இதை பார்த்த கரையில் இருந்த மக்கள் உடனடியாக படகுகளை எடுத்து கொண்டு விமானம் அருகில் சென்று அதில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டார்கள்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 9.30க்கு நடந்துள்ளது, இதில் ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளிவராத நிலையில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையில், சுக் விமான நிலையத்தில் குறுகிய தூரத்துக்கு மட்டுமே ஓடுபாதை அமைந்திருந்ததால், இந்த விபத்து நேரிட்டிருப்பதாகப் பயணிகள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே நேரம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 13 ஆண்டுகளுக்கு முன், அந்த விமானத்தை பப்புவா நியூ கினியா நாடு வாங்கியதாகவும், பழமையான அந்த விமானத்தை முறையாக பராமரிக்காததால் இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2013-ல் 101 பயணிகளை ஏற்றி சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியாவின் டென்பாஸ்பர் நகரில் ஓடுபாதையை தாண்டி அங்குள்ள ஆழமற்ற நீரில் இறங்கிய நிலையில் படகுகள் மூலம் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்