கிரைமியா கல்லூரி தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவிய நர்ஸ் கைது: ஏன் தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கிரைமியா கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த நர்ஸை திடீரென பொலிசார் கைது செய்தனர்.

Galina Roslyakova என்னும் அந்த நர்ஸ் தான் பணி புரிந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த பொலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்திற்கு சென்ற பிறகுதான் Galina Roslyakovaவுக்குத் தெரிந்தது, 21 பேரின் உயிரிழப்புக்கும் 65க்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தது தன்னுடைய மகனான Vladislav Roslyakovதான் என்பது.

தனது மகன்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என தெரிய வந்ததும் Galina Roslyakova தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vladislav Roslyakovஇன் பெற்றோர் விவாகரத்து செய்து விட்ட நிலையிலும், அவனது தந்தையையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்