நேருக்குநேர் மோதி சிதறிய பேருந்துகள்: ரத்த வெள்ளத்தில் கிடந்த 47 பேரின் சடலங்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஜிம்பாவே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்க நேர் மோதிக்கொண்ட விபத்தில் 47 பேர் பரிதமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாவே நாட்டின் தலைநகர் ஹராரே மற்றும் தென்கிழக்கு நகரான ரோசெப்பிற்கு இடையே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 47 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதில் கைப்பற்றப்பட்ட 47 பேரின் சடலங்களும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பொழுது இரண்டு பேரூந்துகளுமே 166 கிமீ வேகத்தில் வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜிம்பாவே நாட்டில் பொதுவாகவே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படும். ஆனால் விபத்து நடைபெற்ற பகுதியில் சமீபத்தில் தான் சாலை போடப்பட்டது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் Zambia நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 43 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers