பெண்களால் நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்! திருமணத்தில் வினோத முடிவெடுத்த மணமகன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் தான் இந்த விசித்திரமான திருமணத்தை செய்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கிருந்த பெண் உயர் அதிகாரிகள் கொண்டேவுடன் அடாவடிதனமாக நடந்து கொண்டார்கள்.

இதன் காரணமாக அவர் வேலை பறிபோனது. இதிலிருந்தே பெண்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது.

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் வரும் என நினைத்தார்.

இதையடுத்து Hatsune Miku என்ற கற்பனை கதாபாத்திர பாடகியின் பொம்மை உருவத்தை திருமணம் செய்து கொள்ள கொண்டே முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெண் பொம்மையை கொண்டே திருமணம் செய்து கொண்டார்.

ஒரு ஆண் - பெண் திருமண நிகழ்வில் இருக்கும் கேக்குகள், பரிசு பொருட்கள், மோதிரம் போன்ற அனைத்து விடயங்களும் இத்திருமணத்திலும் இடம் பெற்றன.

மணமகனான கொண்டே முழு வெள்ளை நிற ஆடையில் இருந்தார்.

பொம்மைக்கும் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கொண்டே கூறுகையில், நான் கவலையாக இருக்கும் போது Hatsune Mikuவின் பாடல்களை தான் கேட்பேன்.

அது எனது மனதுக்கு ஆறுதலாக இருக்கும், அதனால் தான் அதையே திருமணம் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் கொண்டேவின் செயலுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers