189 பேருடன் கடலில் விழுந்த விமானம்: விமான நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசிய விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம் அண்மையில் 189 பயணிகளுடன் கடலில் விழுந்தது.

இந்த விமான விபத்து தொடர்பாக அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் இயக்கும் 6 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளை களையுமாறு கூறப்பட்டுள்ளது.

பிரச்சனைகள் சரிசெய்யப்படா விட்டால் தாழ்தல், நிலப்பரப்பில் மோதுதல், விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்