இரத்தம் தோய்ந்த சடலம் அருகே உதவி கேட்டு அழுதுகொண்டிருந்த குழந்தை: பரபரப்பு சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 4 வயது மகனின் கண்முன்னே தாய் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் நோவஸிபிர்ஸ்க் பகுதியை சேர்ந்த Olesya Lisina (29) என்கிற பெண்ணை, அவருடைய காதலன் நதேஜ்தா ஷெல்லோவாவா (48), காரசாரமான விவாதத்திற்கு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை Olesya-வின் 4 வயது மகன் டெனிஸ் லிசின் நேரில் பார்த்த படியே கதறி அழுதுகொண்டிருந்துள்ளான்.

ஆனால் அதனை பொறுப்படுத்தாத நதேஜ்தா, சடலத்துடன் சேர்ந்து குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்றுவிட்டான்.

இரத்தம் தோய்ந்த சடலம் அருகே நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்த டெனிஸ், தாயிடம் இருந்த செல்போனை எடுத்து தன்னுடைய பாட்டிக்கு போன் செய்துள்ளான்.

அவரிடம், :அவன் ஒரு கத்தியால் என்னுடைய அம்மாவை கொலை செய்துவிட்டான்: என கூறியுள்ளான்.

இதனை கேட்டு பதறிய பாட்டி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ், நதேஜ்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காதலி தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளான்.

இதற்கிடையில் சிறுவனை மீட்ட பொலிஸார், உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். அவனுக்கு தற்போது உறவினர்கள், உளவியல் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்