சிறுவனின் மர்ம உறுப்பில் இருந்த 39 உலோக பந்துகள்: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையடைந்த சிறுவனின் மர்ம உறுப்பில் 39 உலோக பந்துகள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையடைவதாக வூஹான் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.

அப்போது அவனுக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், உள்ளே 39 உலோக பந்துகள் 'U' வடிவில் சிக்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனை வெளியில் எடுக்க முயன்றால் நிச்சயம், அதன் வடிவத்தை மாற்றி ஆபத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி ஜனவரி 16ம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம், வெற்றிகரமாக பந்துகள் வெளியில் எடுக்கப்பட்டன.

சிகிச்சை முடிந்து தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்