1000க்கும் அதிகமான குழந்தைகள், பெரியவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐரோப்பாவின் பெலாரஸ் நாட்டில் 1000க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலாரஸ் நாட்டின் ப்ரெஸ்ட் நகரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய ஆடம்பர குடியிருப்பு ஒன்றிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது அடுக்கடுக்காக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் ஆராய்ச்சி மேற்கொண்ட அதிகாரிகள் அடுத்தது ஒவ்வொரு நாளும் 40 எலும்புக்கூடுகள் என கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து நகர அதிகாரி அண்ணா காண்டக் கூறுகையில், இதுவரை 600 எலும்புகூடுகளை கைப்பற்றியுள்ளோம். இதில் பெலாரஸ் ராணுவ வீரர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் எலும்புக்கூடுகள் உள்ளன.

இவர்கள் அனைவரின் உடல்களிலும் கத்திக்குத்து மற்றும் தோட்டாக்கள் பாய்ந்ததற்கான தடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மட்டுமே இத்தனை எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் மற்றொரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் 1000க்கும் அதிகமானவர்களிடன் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என தெரிகிறது.

1941-42 காலகட்டத்தில் 28,000 யூதர்கள் இப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்களில் சுமார் 17,000 பேர் அக்டோபர் 1942 இல் ப்ரோனாயா கோரா இரயில் நிலையம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து மற்ற 1000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் அனைவரையும் நிர்வாணப்படுத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய ஹிட்லர் உத்தரவிட்டிருக்கலாம் எனவும் வரலாற்று கணக்கால் நம்பப்படுகிறது.

இதிலிருந்து வெறும் 19 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்