பிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல்: அனைவரையும் கவர்ந்த புகைப்படம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வியட்நாம் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை மருத்துவரின் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படத்தை Phương Châu International மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவுடன் தன்னை பிரசவம் பார்த்த மருத்துவரின் ஆடையை இறுக பற்றிக்கொண்டது.

இதனை புகைப்படம் எடுத்த மருத்துவமனை நிர்வாகம் தங்களது பக்கத்தில் வெளியிட்டுள்ளது

சுமார், 1,000 பேரை இந்த புகைப்படம் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தான் பிறந்தது இந்த மருத்துவருக்கு பிடிக்கவில்லை என்று குழந்தை கூறுகிறது என கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், தனக்கு பசிக்கிறது என்றும் உணவு வேண்டும் என கேட்கிறது என கிண்டல் செய்ததோடு மட்டுமல்லால் 'Baby Strong', 'Boss Baby என செல்லப் பெயர்களை வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்