என் மனைவி துப்பாக்கிச்சூட்டில் இறந்துட்டா! சடலத்தை பார்த்து கதறிய உயிர் பிழைத்த கணவன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மனைவியை பறிகொடுத்த கணவன், சடலத்தை பார்த்து கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை நடத்திய முக்கிய நபரின் பெயர் Brenton Tarrant என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நபர் இந்த துப்பாக்கி சூட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ஆனால் அவரின் மனைவி மசூதிக்கு அருகில் உள்ள சாலையில் நடந்து வந்த போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

சம்பவ பரபரப்பு அடங்கிய பின்னர் தனது மனைவியை தேடி அந்த நபர் வந்த நிலையில் மனைவி சடலமாக கிடப்பதை பார்த்து கதறினார்.

பின்னர் புலம்பியபடியே என் மனைவி இறந்துவிட்டார் என கத்தியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்