ஹோட்டல்களில் ரகசிய கமெரா..1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு! தென்கொரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென்கொரியாவில் ஹோட்டல் அறையில் தங்கும் விருந்தாளிகளை ரகசிய கமெரா மூலம் படம் எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்ட கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தென் கொரியாவில் ரகசிய கமெரா மூலம் படம் பிடிப்பது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஹோட்டல்களில் ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள், ஹோட்டல் அறையில் இருக்கும் தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் Holder மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான Socket ஆகியவற்றில் மினி கேமரா வைத்து ஆபாச படம் எடுத்துள்ளனர்.

இப்படி எடுக்கப்பட்ட ஆபாச படங்கள் மூலம் இந்த குழு சுமார் 6200 டாலர்கள் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமின்றி அவர்கள் உள்ளூர் மதிப்பின் படி 30 மில்லியன் வான், அபராதம் செலுத்தவேண்டியதிருக்கும்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த குழுவினர் கடந்த

1 மிமி லென்ஸ் கேமராவை பத்து தென் கொரிய நகரங்களில் 30 வெவ்வேறு ஹோட்டல்களில் ரகசியமாக வைத்து படம் பிடித்துள்ளனர்.

அதன் பின் நவம்பர் மாதம் ஒரு வெப்சைட் துவக்கி அதில் காணொளிகளை பதிவிட்டுள்ளனர்.

முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

இந்த குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளதாகவும். அந்நிய நாட்டு சர்வர் மூலம் இந்த வெப்சைட்டை நடத்தியாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர். தற்போது இந்த தளம் முடக்கப்பட்டு விட்டது என்கிறது காவல்துறை.

கொரியாவில் 2012 இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017-ல் 6000 வழக்காக அதிகரித்துள்ளது.

5400 பேர் ரகசிய கேமெரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2 சதவீதம் பேர் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் காரணமாக 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்