நியூசிலாந்தில் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு..அடுத்த மாதம் அதிரடியாக நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் பற்றி தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் 50 பேர் பலியாகிய நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் இப்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும்.

எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து ஜெசிந்தா ஆர்டன் கூறுகையில், நியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும்.

எளிதாக சொல்லவேண்டுமென்றால், கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும்.

இந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். இது தொடர்பாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...