இலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு துரதிருஷ்டவசமானது: தமிழிசை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் ஆகிய 6 இடங்களில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறியதில், பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்கள் உயிரிழந்தனர்.

ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் குண்டுவெடிப்புகளால் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து,கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது எனவும் அங்கே அமைதி திரும்பவேடும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்