முன்னாள் காதலியை மறைந்திருந்து உளவு பார்த்த நபருக்கு நடந்த சோகம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகோ நாட்டில் முன்னாள் காதலியை உளவு பார்க்க சென்ற காதலன் சுரங்கப்பாதையில் சிக்கி 24 மணி நேரம் கழித்துள்ளார்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த சீசர் அர்னால்டோ கோமஸ் (50) என்பவரிடம் இருந்து அவருடைய 14 வருட காதலி கிரிசல்டா சாண்டிலன் (58), கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

ஆனால் அதன் பிறகும் கூட கிரிசல்டாவிற்கு தெரியாமல், அவருக்கு வேறு ஏதேனும் காதலன் இருப்பார்களா என்கிற சந்தேகத்தில் சீசர் பின் தொடர்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் கிரிசல்டாவின் வீட்டிற்கு பின் பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் கேட்டுள்ளது. பூனையின் சத்தம் என அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த சத்தம் அதிகரித்துள்ளது. உடனே பக்கத்து வீட்டு நபரை அழைத்து சென்று பார்க்க கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபர் உள்ளே எதுவும் இல்லை என கூறியுள்ளார். சில காலணிகள், கருவிகள் மற்றும் நீர் இருப்பதை கவனித்த கிரிசல்டா நன்றாக உள்ளே எட்டி பார்க்கும் போது சீசர் இருப்பதை கவனித்துள்ளார்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த கிரிசல்டா, வெளியில் வருமாறு கூறியுள்ளார். ஆனால் சீசர் 24 மணிநேரமாக உள்ளே சிக்கிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் இருப்பதாக புலம்பியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீர்ர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அவரை வெளியில் மீட்டெடுத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீசர், கடுமையான நீரிழப்பு மற்றும் சாத்தியமான நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதற்கான சிகிச்சை அனைத்தும் முடிந்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்