கடலுக்குள் விழுந்த விமானம்... உள்ளிருந்த அனைவரும் பலியான நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியானது!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

Honduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்து அனைவரும் உயிரிழந்த நிலையில் விமானி மற்றும் பயணிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Honduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று முன் தினம் கிளம்பியது.

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளே இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

இன்னொரு நபர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சூழலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விமானத்தை இயக்கிய கனடாவை சேர்ந்த விமானி பேட்ரிக் போர்செத்தின் மற்றும் உயிரிழந்த பயணிகளான பிரட்லி போஸ்ட், பெய்லி சோனி, டோனி டுப்லர், ஆண்டனி டுப்லர் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் விமானி பேட்ரிக் தவிர மற்ற நால்வரும் அமெரிக்கர்கள் என தெரியவந்துள்ளது.

பேட்ரிக் தொடர்பாக அவர் சகோதரி ஜென்னா கூறுகையில், சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் என் சகோதரர் பேட்ரிக் உயிரிழந்துவிட்டார்.

அவர் சிறந்த விமானியாக திகழ்ந்ததோடு, நல்ல மனிதராகவும் இருந்தார்.

அவரை நானும் என் குடும்பத்தாரும் அதிகம் மிஸ் செய்வோம், அவரில்லாமால் எப்படி இருக்க போகிறோம் என தெரியவில்லை என வருத்தமுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers