கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக தவித்த பெண்மணி: வளர்ப்பு நாய் செய்த செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக பள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்க அவரது வளர்ப்பு நாய் உதவியுள்ளது.

வெல்லிங்டன் பகுதியில் மாஸ்டர்டன் என்ற இடத்தில் 63 வயதான கெர்ரி ஜோர்டான் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் பார்டர் கோலி வகையை சேர்ந்த நாய் ஒன்றை பேட் என பெயரிட்டு தனது மகன் போல் வளர்த்து வருகிறார்.

கடந்த வியாழனன்று இவர் தனது வளர்ப்பு நாயுடன் வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியை நோக்கி காரில் சென்றுள்ளார்.

அந்த கார் பஹியாதுவா என்ற பகுதியில் செல்லும்பொழுது திடீரென 45 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கால், நெஞ்சு மற்றும் மார்பெலும்பு ஆகிய பகுதிகளில் கெர்ரிக்கு படுகாயமேற்பட்டது.

இதனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. 3 இரவுகளை அந்த பள்ளத்திலேயே அவர் கழித்துள்ளார்.

அவரை வளர்ப்பு நாய் பேட் காவல் காத்துள்ளது. அவரை சுற்றி சுற்றி வந்து ஊக்கமளித்து கொண்டே இருந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, 2 பேர் அந்த வழியே வந்துள்ளனர். அவர்களை நோக்கி பேட் குரைத்துள்ளது. இதனால் அங்கு வந்த அவர்கள் சம்பவம் பற்றி அறிந்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு உடனடியாக கெர்ரியை மீட்டு வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்