சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திப்பு.. அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது கிரகணங்கள் எனும் அரிய நிகழ்வு வானில் நேற்று இடம் பெற்றுள்ளது.

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரணம் லத்தீன் அமெரிக்காவின் சிலி, அர்ஜண்டினா உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த சூரிய கிரகணம் மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான நீடித்ததுள்ளது.

சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் மிகவும் அரிதான இந்த நிகழ்வின் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சிலி, அர்ஜண்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் காட்சியளித்தது.

இந்த அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்பதால் தொலை நோக்கி வாயிலாக பலர் கண்டு ரசித்துள்ளனர்.

இந்தியாவில் இரவாக இருந்ததால் காண முடியவில்லை இருப்பினும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடியுள்னார்.

குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை புனித நீராடி வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...