உலகின் முதல் மிதக்கும் மாட்டுப்பண்ணை! எங்கு தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்து நாட்டில் உலகின் முதல் மிதக்கும் மாட்டுப்பண்ணை செயல்பட்டு வருகிறது.

ரோட்டர்டேம் துறைமுகத்தில் உலகிலேயே முதன் முதலாக மிதக்கும் மாட்டுப்பண்ணையை நெதர்லாந்து அமைத்துள்ளது. சூழலியல் மாற்றத்தினால் கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக விவசாயத்தை கடல்பரப்பின் மேல் மேற்கொள்ள நெதர்லாந்து முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு படியாக இந்த மிதக்கும் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. கடல் பரப்பில் சுமார் 900 சதுர மீற்றருக்கு, 3 அடுக்கு கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 32 கறவை பசுக்களுக்கு அதிகாரிகள் தீவனம் இட்டும், வளர்த்தும் வருகின்றனர்.

மேலும், பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலை உடனடியாக பதப்படுத்தி, பால் சார்ந்த உணவு பொருட்களையும் தயாரித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்