அழகிய இளம்பெண்ணை உடை களைய செய்த பொலிசார்: காத்திருந்த அதிரவைக்கும் காட்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேஸில் சிறை ஒன்றில் குற்றவாளிகளைக் காண வந்து விட்டு திரும்பிச் சென்ற ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்படவே, அவரை பிடித்து உடை களையச் செய்த பொலிசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ரியோ டி ஜெனீரோவிலுள்ள Gericinó சிறைக்கு வந்து கைதிகளை பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் ஒரு கூட்டம் பெண்களை சிறையில் இருந்த அதிகாரிகள் CCTVகமெராக்கள் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணை ஏழு பெண்கள் சூழ்ந்து மறைத்தபடி நடந்து செல்வதைக் கண்டதும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரிக்கும்போது, அந்த அழகிய இளம்பெண்ணின் நடை ஆண் நடப்பதைப் போல் இருக்கவே, பொலிசார் அவரை தனியே அழைத்துச் சென்று உடை களைய வற்புறுத்தியிருக்கின்றனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் பேசும்போது, அவரது சத்தத்திற்கேற்ப அவரது முகத்திலுள்ள தசைகள் அசையவேயில்லை.

அவரது தலைமுடியில் கை வைத்தபோது அது கையோடு வந்து விட்டது. அவர் தனது சட்டையைக் கழற்றும்போது, அவர் கை ஆணின் கை போல் இருக்க, அதில் பச்சையும் குத்தப்பட்டிருக்கிறது.

முழுமையாக உடையகற்றியபின்னரே, அந்த நபர் பெண்ணின் முகம் போன்ற முகமூடி ஒன்றை அணிந்திருந்தது தெரியவந்தது.

அந்த முகமூடியையும் பொலிசார் அகற்றச் சொல்ல, முகமூடியை அகற்றிய அந்த நபரைக் கண்ட பொலிசார் திடுக்கிட்டனர்.

அந்த நபர், பிரேஸில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான Clauvino da Silva (42). தொடர்ந்து மேற்கொண்ட சோதனைகளில், சிறைக்குள் da Silvaவின் மகள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் விசாரணையில், சிறையில் கைதிகளை சந்திக்க நேரம் அனுமதிக்கப்படுவதை பயன்படுத்திக் கொண்டு, தப்பிச் செல்ல da Silva திட்டமிட்டது தெரியவந்தது.

மகளின் உடைகளை வாங்கி அணிந்து கொண்ட da Silva, தன்னை பார்க்க வந்த ஒரு கர்ப்பிணிப் பெண், மறைத்துக் கொண்டு வந்த முகமூடியையும் அணிந்து கொண்டு தப்ப முயன்றதாக பொலிசார் கருதுகிறார்கள்.

da Silvaவின் மகளான Ana Gabriele உட்பட, அவரை காண வந்த பெண்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தப்பிக்க முயற்சித்ததையடுத்து da Silva, வேறொரு அதிக பாதுகாப்புள்ள சிறைக்கு மாற்றப்பட்டதோடு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்