நூலிழையில் சாகவிருந்த சிறுவன்.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய நபர்கள்! வைரலான வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் 5வது தளத்தில் மாட்டிக் கொண்ட சிறுவனை, இரண்டு நபர்கள் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

Grozny நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 6 வயது சிறுவன் அறை ஒன்றில் கழிவறையை தேடி திரிந்துள்ளான். பின்னர் கழிவறையை கண்டுபிடித்த அவன், அதனுள் சென்றபோது எதிர்பாராத விதமாக கதவு உள்பக்கம் பூட்டிக்கொண்டது.

இதனால், வேறு வழியாக வெளியேற நினைத்த சிறுவன் ஜன்னலுக்கு வெளியே சென்றுள்ளான். அங்கு வடிகால் குழாயின் மீது நின்று மாட்டிக் கொண்டான். சற்று கால் இடறினாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில் சிறுவன் இருப்பதை, அவ்வழியாக சென்றவர்கள் கண்டு கூச்சலிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டு நபர்கள் துரிதமாக செயல்பட்டு, சிறுவன் இருந்த அறைக்கு பக்கத்து அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறுவனை காப்பாற்றியவர்கள் Chechenயைச் ச்சேர்ந்த ஆடம் ஜாமேவ் மற்றும் அஸ்லான் தினேவ் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஆடம் ஜாமேவ் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுவனை துணிச்சலுடன் காப்பாற்றிய இருவருக்கும் Chechen உள்துறை அமைச்சர் ருஸ்லான் அல்கானோ விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்