கட்டளையிட்டால் உறைந்து போகும் நாய்கள்.. அனைவரையும் கவர்ந்த வீடியோ!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஸ்வீடன் நாட்டில் எஜமானரின் கட்டளைக்கு ஏற்ப சிலைபோல நின்ற நாய்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்வீடனின் Sundsvall-ஐ சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் Evelyn Edblad. இவர் அவுஸ்திரேலியாவின் கெல்பிஸ் இனத்தைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தனது நாய்கள் தான் இடும் கட்டளையின்படி செயல்படுகின்றனவா என்று பரிசோதிக்க நினைத்தார் Evelyn. அதற்காக வனப்பகுதிக்கு அவற்றை அழைத்துச் சென்ற Evelyn, ‘Freeze’ என கட்டளையிடுகிறார். உடனே அந்த நாய்கள் அசைவில்லாமல் 30 விநாடிகள் வரை உறைந்து நிற்கின்றனர். கண்ணைக் கூட அசைக்காமல் தனது எஜமானரின் மறு கட்டளைக்கு காத்திருக்கின்றன.

பின்னர் விசில் அடித்ததும் நொடிப்பொழுதில் சீறிப்பாய்ந்து ஓடுகின்றன. இதுதொடர்பான வீடியோவை Evelyn சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அத்துடன், ‘இது எனது நாய்களுடன் வழக்கமான மதிய உணவு நடைப்பயணத்தின் போது படமாக்கப்பட்டது. ஜாக்சன், கேஷ் மற்றும் எக்ஸ் (நாய்கள்) ஆகியோர் ஓடுவதற்கு முன், நான் ஒரு சமிஞ்சையை கொடுத்தேன். அதன் பின்னரே அவை ஓடின. இதனை அவர்களுக்கு நான் கற்றுக் கொடுத்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக இந்த கெல்பிஸ் நாய்கள், ஆடுகளை கட்டுப்படுத்தும்போது உறைந்துபோனது போல் நிற்கும். இது சிறிய அளவிலான பயிற்சியினாலேயே அவைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers