233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி... பெண் வெளியிட்ட வீடியோ: திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவைக் கண்டு இணையவாசிகள் திட்டி வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் புறப்பட்ட விமானத்தில் சிறிது நேரத்திலேயே பறவை ஒன்று மோதியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாகவே துணிந்து செயல்பட்ட விமானி, ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் இருந்த பயணிகள் சிலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது. விமானத்தை சாதூர்யமாக தரையிரக்கி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த Pole Dancing Instructor-ஆன Alla Garkovenko(24), வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், நான் தப்பிவிட்டேன், என் கை முழுவது சேராகிவிட்டது என்று கூறி, விமான நிறுவனத்தை திட்டினார். அதன் பின் சில நிமிடங்களில் அங்கிருந்த பயணிகள் சிலரிடம், விமானி பேசிய போது, அந்த பயணிகள் அனைவரும் தங்களை காப்பாற்றியதற்கு நன்றி என்று தெரிவித்தனர்.

ஆனால் இவரோ தன்னைக் காப்பாற்றிய விமானிக்கு நன்றி சொல்லாமல், பாராட்டாமல், தனக்கு என்ன பிரச்சனை, சேராகிவிட்டது, இடம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் காட்டுகிறார் என்று திட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்