தெருவில் பிஞ்சு குழந்தையுடன் அகதி தாய் செய்த செயல்: கண்ணீரில் மூழ்கிய நெட்டிசன்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பெரு நாட்டில் அகதி தாய் ஒருவர் கையில் 9 மாத பிஞ்சு குழந்தையுடன் மெல்லிசை பாடல் பாடி சம்பாதிக்கும் சம்பவம் இணைய பயனர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இந்த வீடியோ ஐ.நா-வின் அகதிகள் அமைப்பான UNHCR-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்கில் வைரலானது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வெனிசுலா பெண் தனது நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீங்கள் கேட்க வேண்டிய ஆறுதலான மெல்லிசை என்ற தலைப்பில் UNHCR பதிவிட்ட 1 நிமிட வீடியோவில், பெண் தெருவில் மைக்கின் முன் நின்று மெல்லிய மெல்லிசை பாடுகிறார், அதே நேரத்தில் தனது பிறந்த குழந்தையை தாலாட்டுகிறார். ஒரு கட்டத்தில், அவர் ஒரு நொடி நிறுத்தி குழந்தையை முத்தமிட்டுகிறார்.

மேலும், அவருக்கு முன் வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் பாதசாரிகள் பணம் அளித்து செல்கின்றனர். பெருவின் தெருக்களில் தினமும் இரண்டு மணி நேரம் அவர் பாடுகிறார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்த வீடியோ மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளதாக என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், இது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது ... ஒரு துணிச்சலான பெண் என பதிவிட்டார்.

அந்தப் பெண்ணைப் புகழ்ந்த எழுதிய ஒருவர், மற்றவர்களைப் போலவே, அவள் தன்னை நம்புவதற்கு முயற்சி செய்வதன் மூலம் தன்னால் இயன்றதைச் செய்ய முயற்சிக்கிறார், மற்றவர்களிடம் உதவி செய்யும்படி கேட்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்