செய்திக்காக.. ஹாங்காங்கில் திட்டமிட்டு வெளிநாட்டு பத்திரிக்கையாளர் செய்த செயல்: சிக்கிய வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கில் செய்திக்காக வெளிநாட்டு பத்திரிக்கையாளர் திட்டமிட்டு செய்த செயல் வீடியோவாக வைரலாகி வருகிறது.

சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டகாரர்கள் சீனா வங்கிகள், நிறுவனங்களை சூரையாடி வருகின்றனர்.

ஹாங்காங்கில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக செய்தி சேகரிக்க பல வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில், ஆக்டோபர் 4ம் திகதி, அலுவலகத்தில் வேலை செய்ய சென்ற நபர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராட்டகாரர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் என பல பேர் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்தனர்.

அவர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பொது நாம் அனைவரும் சீனர்கள் என மூழக்கமிட்டு சென்றார்.

அந்த சமயத்தில் மூகமுடி அணிந்திருந்து வெளிநாட்டு பத்திரிக்கையாளர், அவரை அலுவலகத்திற்குள் நுழையாத படி இடையில் நின்றுக்கொண்டு புகைப்படம் எடுத்தார்.

அப்போது, ஓடி வந்த மூகமுடி அணிந்த போராட்டகாரர், அலுவலகத்திற்கு செல்ல முயன்ற ஊழியரை சரிமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இச்சம்பவமும் அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி இன்னமும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வெளிநாட்டு பத்திரிக்கையாளர் வழியை மறித்து அவரை தாக்க வழிவகுத்ததாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்