இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரக் கல் ஒன்று ரஷ்யாவிற்கு உட்பட்ட சைபீரியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரக்கல்லினுள் மற்றுமொரு வைரக்கல் காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி உள்ளே காணப்படும் வைரமானது சுயாதீனமாக அசையக்கூடியதாகவும் இருக்கின்றது.
இந்த வைரத்திற்கு Matryoshka Diamond எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது ஒரு பெரிய வைரக்கல் இல்லை என்றாலும், ஒன்றினுள் ஒன்று காணப்படும் வைரத்தினை கொண்டிருப்பதனால் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளது.
0.62 கரட்களே ஆன இந்த வைரமானது 4.8 x 4.9 x 2.8 மில்லி மீற்றர் அளவுடையதாக காணப்படுகின்றது.
இதனுள்ளே காணப்படும் மற்றைய வைரமானது 0.02 கரட்கள் உடையதாகவும் 1.9 x 2.1 x 0.6 மில்லி மீற்றர் அளவுடையதாகவும் உள்ளது.