வயதான பெண்ணை பார்த்து மனம் உருகிய திருடன்... சுவாரஷ்ய வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் துப்பாக்கியை பார்த்து பயந்து போன வயதான பெண்மணியை திருடன் நெற்றியில் முத்தமிடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் அமரண்டே நகரில் உள்ள ஒரு மருந்து கடையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் இரண்டு திருடர்கள் கையில் துப்பாக்கியுடன் புகுந்துள்ளனர்.

அங்கிருந்த ஊழியரிடம், பணம் அனைத்தையும் வெளியில் எடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில் கடைக்கு சென்றிருந்த பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த வயதான பெண், துப்பாக்கியை பார்த்த பயத்தில் தாமாக பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

ஆனால் அதனை வாங்க மறுத்த திருடன், இல்லை அம்மா. உங்கள் பணத்தை நான் விரும்பவில்லை. நீங்கள் அமைதியாக மட்டும் இருங்கள் எனக்கூறி அவருடைய தலையில் முத்தமிட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிஸார், சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வீடியோவில் இடம்பெற்றுள்ள இரண்டு திருடர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்