இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது.

இது கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கத்தால் சுலாவசி என்ற தீவிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கல் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடியுள்ளனர்.

மேலும் உள்ளூர் அதிகாரிகள் சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கின்ற போதிலும், முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டடுள்ளது.

நிலநடுக்கத்தால் மிகவும் பீதி அடைந்ததாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை காண முடிந்தது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்