வெடித்து சிதறிய எரிவாயு குழாய்: 7 பேர் பலி... 8 பேர் காயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேச துறைமுக நகரமான சிட்டகாங்கில் எரிவாயு குழாய் வெடித்ததில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாடி கட்டிடத்தின் முன் இருந்த குழாய் வெடித்ததில், கட்டிடத்தின் சில சுவர்கள் சிதறியதாக நேரில் பார்த்த சாட்சியம் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், மற்றவர்கள் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தனர் என்று நேரில் பார்த்த சாட்சியம் மொஹ்சின் கூறியுள்ளார்.

வெடிப்புக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை, விசாரணை நடந்து வருகிறது என தீயணைப்பு சேவை அதிகாரி அமீர் ஹொசைன் கூறியுள்ளார்.

இதேபோல கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் பலூன்களை வெடிக்க பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏழு குழந்தைகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்