பிரித்தானியா சிறுமியை கடலுக்குள் இழுத்துச் சென்று கடித்து குதறிய டால்பின்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

மெக்ஸிக்கோவில் பிரித்தானியா சிறுமியை இரண்டு டால்பின்கள் கடலுக்கு அடியில் இழுத்துச்சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேன்கன் நகரத்தில் பென் கடற்கரையில் இடம்பெற்ற டால்பின்களுடனான நிகழ்விலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதான பிரித்தானியா சிறுமி லேக்ஸி குடும்பத்துடன் மெக்ஸிக்கோவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு கேன்கன் நகரத்தில் இடம்பெற்ற டால்பின் நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர். இதன்போது, இரண்டு டால்பின்கள் லேக்ஸியை கடலுக்குள் இழுத்துச்சென்று தாக்கியுள்ளது.

இதைக்கண்ட லேக்ஸியின் தாய் லாரா-ஜேன் யியோ அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பயிற்சியாளர்களிடமிருந்து வேண்டுகோள் விடுத்த போதிலும் டால்பின்கள் தாக்குவதை நிறுத்தவில்லையாம், ஆனால் லேக்ஸி வைத்திருந்த பாடிபோர்டின் மூலம் சமாளித்து தப்பியுள்ளார்.

sun

இதில், டால்பின்கள் கடித்து தாக்கியதால் கொடூரமான காயங்களுடன் லேக்ஸி உயிர் தப்பியுள்ளார்.

மோசமான கடல் நிலைமைகளுக்கு உட்பட்டதால் துன்பப்பட்ட டால்பின்கள் இவ்வாறு நடந்துக்கொண்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்