பாலியல் குற்றவாளியை பலமுறை சந்தித்த இளவரசி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நோர்வே மகுட இளவரசி அமெரிக்காவில் தண்டனை பெற்ற பின்னர் பலமுறை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனை சந்தித்ததை ஒப்புக் கொண்டு இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க கோடீஸ்வரரும், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இந்த ஆண்டு ஆகஸ்டில் மன்ஹாட்டன் சிறைச்சாலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவருடன் தொடர்பில் இருந்ததாக பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் நோர்வே மகுட இளவரசிமெட்டே-மரிட் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த விவகாரம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளவரசர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை விதித்து ராணி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு நோர்வே இளவரசி மெட்டே-மரிட் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், 2011 மற்றும் 2013 க்கு இடையில் பலமுறை எப்ஸ்டீனை சந்தித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

டி.என் செய்தித்தாளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நோர்வே அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர், எப்ஸ்டீனின் குற்றங்களின் தீவிரத்தை அவர்கள் சந்தித்தபோது கிரீடம் இளவரசி அறிந்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அந்த அறிக்கையில், 'எப்ஸ்டீன் செய்த குற்றங்களின் தீவிரத்தை நான் அறிந்திருந்தால் நான் ஒருபோதும் அவருடன் தொடர்பு கொண்டிருந்திருக்க மாட்டேன். அவரது கடந்த காலத்தை நான் இன்னும் முழுமையாக ஆராய்ந்திருக்க வேண்டும், நான் அவ்வாறு செய்யவில்லை என்பதற்காக வருந்துகிறேன்' என இளவரசி மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்