பல லட்சம் ரூபாயை பேருந்தில் விட்டு சென்ற நபர்! அதை கண்ட டிரைவர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதியில் பேருந்தில் மறந்து விட்டுச் சென்ற ஒன்பது லட்சம் ரூபாயை டிரைவர் ஒருவர் அப்படியே கொண்டு வந்து பொலிசாரிடம் ஒப்படைத்ததால், அவர் கெளரவிக்கப்பட்டார்.

சவுதியில் பேருந்து ஓட்டுனராக இருப்பவர் Abhishek Nad Gobindhan. இவருடைய பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் 20,000 திர்ஹாமை மறந்து (இலங்கை மதிப்பில் 9,85,863 லட்சம் ரூபாய்) விட்டு சென்றுள்ளனர்.

பயணிகள் அனைவரும் இறங்கியவுடன், பேருந்தை சோதித்து பார்த்த போது, 20,000 திர்ஹாமை கண்டு, அதை உடனடியாக எடுத்து சென்று, Naif காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரின் இந்த நேர்மையை பாராட்டும் வகையில், துபாய் பொலிசார் நேர்மையான மனிதன் என்று கூறி அவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர். இவரைப் போன்று இருக்க வேண்டும், இவர் ஒரு உதாரணம் என்று பொலிசார் கூறினர்.

Abhishek Nad Gobindhan பொலிசாரிடம் சான்றிதழ் வாங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவரை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்